உற்று நோக்கும் உலகக்கோப்பை…!ஓங்கி அடிக்கும் அணிகள் இவை..!கபில் கரார்..!
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கின்ற உலகக்கோப்பை திருவிழா வரும் 30தே தேதி தொடங்க உள்ளது.இதில் பல நாட்டின் அணிகள் விளையாட உள்ளது.இது குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பல தகவல்கள் பறந்து வருகிறன்றன.
மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உலககோப்பை பற்றி என்னதான் சொல்லுகிறார்கள்,இந்தியா அணி எப்படி இருக்க போகிறது.அதில் தோனி இருப்பாரா அல்லது இல்லையா..?இதே அணியோடு கோலி க்ல்மிரங்க்க் போகிறார ..? என்று ஆயிரம் கேள்விகளோடு இந்திய அணி பற்றி தகவல் அறிய ஆர்வம கொண்டுள்ளனர்.
ற்ற நாட்டு அணி வீரர்கள் எல்லாம் தற்போதே அறிவிக்கப்பட்டும் ,அவர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்பட்டும் வருகின்ற நிலையில் இந்திய அணி பற்றி கடுகளவு தகவல்கள் கூட தெரியவில்லை என்று ரசிகர்கள் புலம்பி கொண்டிருக்கும் வேலையில் இந்திய அணியின் முன்.கேப்டன் கபில் தேவ் தற்போது உலகக்கோப்பை மற்றும் இந்திய அணி பற்றி வாய் திறந்துள்ளார்.
அது என்னவென்றால் இந்திய அணி தற்போது இளம்படைகளை கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறது.மேலும் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சம விகித அளவில் உள்ளனர்.மேலும் மற்ற அணியை காட்டிலும் நம் அணி அனுபவம் மற்றும் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடும் அப்படியே அரை இறுதி வரை உலககோப்பை போட்டியில் சென்றுவிடும்.அதே போல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியும் அரையிறுதிக்கு வரும் இந்த மூன்று அணிகளும் வலுவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.