பொன்பரப்பி சாதி சண்டைக்கு பாமக தான் காரணம்….அதிரவைக்கும் தகவல்கள்….அதிரடியாக அறிவித்த அந்த குழு…
தற்போது வரை தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விரும்பத்தகாத சம்பவமாக பொன்பரப்பி சம்பவம் இருந்து வருகிறது.இந்த சம்பவம் சாதி ரீதியாக வன்முறை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை சின்னத்தை பாட்டாளி மக்கள் கட்சி உடைத்துள்ளதாக பொன்பரப்பியில் கள ஆய்வு செய்த 10 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு சென்னை சேப்பாக்கத்தில் பேட்டியளித்த அந்த குழு ,அவர்கள் பெண்களை தரக்குறைவாக பேசியதுடன் பாமக தரப்பு வீடுகளை திட்டமிட்டே தாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும் கூறிய அவர்கள், பொன்பரப்பி விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் , இந்து முன்னணியினரும் இணைந்து செயல்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்,மேலும் கூறிய அவர்கள், அங்கு மாற்றுத்திறனாளி ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அடித்ததாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறுவதில் உண்மையில்லை எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.இதன் முலம் பாமக கட்சி தான் இந்த கலவரத்திற்க்கான காரணம் என்பது போல அக்குழு தெரிவித்துள்ளது.