மோடி சொன்ன 15 லட்சம் பொய்! நாங்கள் 3,60,000 தருகிறோம்! – ராகுல் வாக்குறுதி!
இந்தியாவில் மக்களவை தேர்தல் எழுகட்டமாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது மே 19இல் 7வது கட்ட தேர்தல் முடிவந்தடைந்து மே 23இல் இந்தியா முழுவதும் ரிசல்ட் அறிவிக்கப்படும். தற்போது பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கோரிக்கைகளை வரிசியையாக கூறி வருகின்றனர்.
ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ‘ நான் இங்குள்ள இளைஞர்களுக்கு விவசாயிகளுக்கும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மோடி தேர்தல் அறிக்கைகையில் அனைவரது வங்கியிலும் 15 லட்சம் செலுத்துவேன் என கூறினார். அது பொய். ஆனால் நான் அனைவரது வாங்கி கணக்கிலும், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலுத்துவேன்’ என கூறினார்.
DINASUVADU