ஒரு வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமையா? போலீஸ் தீவிர விசாரணை!
உத்திர பிரதேசம் ஆக்ரா பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தம்பி உறவு முறையில் ஒரு ஆண் பேசி, அந்த குழந்தையை வாங்கி சென்றுள்ளான். திடீரென அந்த ஆள் குழந்தையுடன் மாயமாகிவிட்டதை உணர்ந்த அந்த பெண் மற்றும் உறவினர்கள் அந்த ஆளை தேடினர்.
அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சற்று தூரத்தில் அந்த குழந்தை ரத்த போக்குடன் நினைவின்றி இருந்தது தெரிந்ததும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த ஆளையும் காணவில்லை என்பதால் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.ரத்த போக்குடன் நினைவின்றி இருந்த அந்த குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதா என்கிற கோணத்தில்போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
DINASUVADU