எலிமினேட்டர் சுற்றில் எட்டி உதைத்து உள்ளே செல்ல போவது டெல்லியா..? ஐதராபாத்தா..??
ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணி சென்னை அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி மும்பை கெட்டியாக தனது இடத்தை பிடித்து கொண்டது.அடுத்து இன்று நடைபெறும் வெளியேற்றும் சுற்று நடைபெற உள்ளது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஐதராபாத் சன்ரைஸ் அணியும் மோத உள்ளன.மேலும் இதில் வெற்றி பெறும் அணியானது வருகின்ற 10 தேதி நடைபெறும் 2 வது தகுதிச்சுற்றில் சென்னை அணியோடு முட்டும்.
டெல்லியை பொருத்தவரை கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் ,பிரித்வி ஷா ,ஷிகர் தவான் மற்றும் , ரிஷாப் பான்ட், காலின் இங்ராம், ரூதர்போர்டு, கீமோ பால் மற்றும் அக்ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா, டிரென்ட் பவுல்ட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
அதே போல இந்த பக்கம் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் தனது பங்கிற்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் விருத்திமான் சஹா மற்றும் மார்ட்டின் கப்தில், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், யூசுப் பதான், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது மற்றும் பாசில் தம்பி என முரைத்து காட்டுகிறது.
இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் போட்டியில் 12 முறை முருக்கியுள்ளது.அதில் 5 முறை டெல்லியும் 9 முறை ஐதராபாத்தும் கைவசப்படுத்தியுள்ளது.மேலும் இந்த சீசனில் 2 லீக் போட்டிகளில் மோதிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி கண்டுள்ளது.ஆனால் இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை அடித்து எதிர் அணியை நொறுக்கி வரும் டெல்லி அணியின் கையில் அப்பளமாக நொறுங்க போகிறதா..?ஐதராபாத் அல்லது அதிரடி ஆட்டத்திற்கு அவுட் கார்டு போட்டு வெளியேற்ற போகிறதா..?அல்லது வெளியேருகிறதா என்பது இன்று நடைபெறும் போட்டியின் முலமாக தெரியவரும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஆனால் கிரிக்கெட் வட்டாரத்தில் இரு அணியும் பலம் என்றாலும் டெல்லிக்கே வாய்ப்புள்ளது என்று மட்டை தகவல்கள் வருகின்றன.தற்போது டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.