மோடிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய இளைஞர்!
தேர்தல் இறுதி கட்டத்தை நெறுங்கி வருவதால் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உத்திரபிரதேசத்தில், தேர்தல் பரப்புரையின் பேது பிரதமர் மோடி, ராஜீவ் காந்தியை பற்றி அவர் போபர்ஸ் உழலில் நம்பர் ஒன் என காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பல காங்கிரஸ் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தியும் தனது கண்டத்தை டிவிட்டரில் பதிவு செர்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமேதியை சேர்ந்த மனோஜ் காஷ்யப் எனும் இளைஞர் தனது ரத்தத்தால் கடிதம் எழுதி, அதனை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார்.
அந்த கண்டன கடிதத்தில், ‘ராஜீவ் காந்தியை பற்றிய பிரதமர் மோடியின் விமர்சனம் அதிர்ச்சியளிக்கிறது. அவர்தான் ஓட்டுரிமைக்கான வயதினை 18ஆக குறைத்தார். பஞ்சாயத்து முறையை கொண்டு வந்தார். கணிணி புரட்சியை கொண்டு வந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயே அவரை பாராட்டி கூறியிருந்தார். எனவும், அமேதி மக்கள் இன்னும் ராஜீவ் காந்தியை தெய்வமாக பார்க்கின்றனர். அவரை பற்றி அவதூராக இனி பேச வேண்டாம் என கூறிக்கொள்கிறேன். இந்த கடிதம் அரசியல் ரீதியாக எழுதப்படவில்லை. எங்கள் தலைவர் மீதுள்ள பற்றினாள் எழுதுகிறேன். ‘ என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதூ.
DINASUVADU