எங்கு படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல…. எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம்…. அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்….

Default Image

இன்றைய பகட்டான மனித வாழ்வில் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்கவைப்பதை கௌரவ குறைவாகவும் அரசு பள்ளிகளின் நிலை காரணமாகவும் படிக்கவைப்பதில்லை.ஆனால் தற்போது அந்த நிலையை அரசு பள்ளி மாணவர்களே சரிசெய்து தங்களும் யாருக்கும் சளைத்தவரில்லை என்பதனை சுட்டிக்கட்டும் வாகையில் மாவட்ட அளவிலான  ஏற்கனவே நடந்த சதுரங்க போட்டியில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் முதல் இரண்டு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Related image

மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உள்ள இந்தியன் 3சி பள்ளியில் நடைபெற்ற மாவட்ட  அளவிலான சதுரங்க போட்டியில் பத்து    வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் மேலூர் அருகில் உள்ள அ.செட்டியார்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். 14  வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அதே பள்ளியை சேர்ந்த மாணவர் தேவநாத் இரண்டாம் இடம் பெற்றார்.மதுரை மாவட்டம் அரசு துவக்கப்பள்ளியை சேர்ந்த இந்த  வெற்றி பெற்ற மாணவர்களை அவர்களின் பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, இடைநிலை ஆசிரியரும் மாணவர்களின்  பயிற்சியாளருமான செந்தில்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் பாராட்டினர்.

Image result for tamil nadu govt school uniform

எங்கு படிக்கிறோம் என்பது முக்கியமல்ல எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம் என்பதை இந்த சிறார்கள் முலம் அறியலாம்.மதுரை மாவட்டத்தில்  அதிகமான தனியார் பள்ளிகளும் பயிற்சி நிலையங்களும் அதிகம் உள்ள மாவட்டம் அத்தகைய மாவட்டத்தில் அரசு துவக்கப்பள்ளியை சேர்ந்த மாணவர்களால்  பெருமை கொள்கிறது அரசு பள்ளி.தற்போது கோடை நிலவிவருகிறது,இன்னமும் சில வாரங்களில் பள்ளிக்கள் செயல்பட ஆரம்பமாகப்போகிறது எனவே அரசு பள்ளியை ஆதரித்து அங்கு சேர்க்கை வீதத்தை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வார்கள் கூறுகின்றனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்