இந்தியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து ….சீனாவிற்கு செக் வைக்கும் ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகள்…
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை மேலும் விரிவுபடுத்தி அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும் என பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரும் ஐரோப்பா நாடான ஃபிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் மிகவும் அதிகாரம் மிகுந்த அமைப்பாக பாதுகாப்பு கவுன்சில் உள்ளது.இந்த பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள்[5 நிரந்தரம் +10 தற்காலிகம்] உறுப்பினர்களாக உள்ளன.
இதில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஃபிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் மட்டுமே, ரத்து அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவந்தது.
இது கடந்த 2015- ம் ஆண்டு,சீனாவை சேர்ந்த பான் கீ மூன் ஐ.நா பொதுச் செயலாளராக இருந்தபோது, நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது தொடர்பாக வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் வழக்கம்போல அண்டை நாடான சீனா இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தது.
வரைவு மசோதாவைத் தோற்கடிக்க அண்டை நாடான சீன பல்வேறு விதமான எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி நாடுகள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்ததால் சீனாவின் ஆட்டம் அடங்கியது.ஆனால் பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் மெளனம் காத்தது. ஆனாலும் இம்மசோதாவுக்கு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு கிடைத்ததால்,இந்த வரைவு மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போது ஐக்கிய நாடுகளிக்கான ஃபிரான்சின் நிரந்தர பிரதிநிதி ஃபிராங்காய்ஸ் டெலாட்டர்,தனது அறிக்கையில் கூறியதாவது, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்காவுக்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரத்தில் சீனாவை தவிர ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகளுக்கும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.இந்த சபையில் இந்திய நிரந்தர உரிப்பினராகக்கூடது என்ற உயர்ந்த எண்ணத்தில் இருந்த சீனாவிற்கு பலத்த இடி தற்போது விழுந்துள்ளது.