குழந்தைகளை விற்ற விவகாரம் : அமுதாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி
குழந்தை விற்பனை தொடர்பாக அமுதவள்ளி உட்பட 3 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.அமுதவள்ளி உட்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி மனு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த நீதிமன்றம் அமுதவள்ளி உட்பட 3 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.