உழைப்பாளர் தினத்தில் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய மாடல் பைக்குகள்!

Default Image

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஹீரோ நிறுவனம் இரண்டு புதிய பைக்குகளை களமிறக்கி உள்ளது. அதன் தனி சிறப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம் வாங்க,

அந்த இரு மாடல்கள், எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய ரகங்களைதான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. போனஸாக, எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலையும் அறிமுகம் செய்தது ஹீரோ நிறுவனம்.எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார் சைக்கிள்களில் 199.6 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய பைக்குகளிலும், இந்த எஞ்ஜின் மூலம், 18.4 பிஎஸ் பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரு மாடல்களிலும் சஷ்பென்சன் உள்ளிட்ட அமைப்புகள் மட்டும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார் சைக்கிள் ரோட்-பயாஸ்ட் வேரியண்டாக இருக்கின்றது. அதற்கேற்ப இதன் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 7 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் மோனோசாக் அப்சார் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வண்ணம் இந்த மாடல்களில் ளூடூத் இணைப்பு வசதியுடன், முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மிக முக்கிய அம்சமாக இதில், ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200டி மாடலில் சற்று விரிந்த ஹேண்டில் பார்கள் மற்றும் ரிப்ட் இருக்கை ஆகியவை பொறுத்தப்பட்டிருப்பதால் பயணம் மிகவும் சொகுசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலின் போட்டி மாடலாக கருதப்படும், பஜாஜ் அவென்ஜர் 220, சுஸுகி இன்ட்ரூடர ஆகிய மாடல்களை விட குறைவான விலையாக இருப்பதால் கண்டிப்பாக இந்த மாடல் அட்வென்ச்சர் ரக பைக் மாடல் விற்பனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்