ஃபானி புயல் பாதிப்பை தடுக்க இஸ்ரோ செயற்கைக்கோள்கள் மிகவும் உதவியது – இந்திய வானிலை ஆய்வு மையம்
ஃபானி புயல் பாதிப்பை தடுக்க இஸ்ரோ செயற்கைக்கோள்கள் மிகவும் உதவியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபானி புயல் ஒடிசாவில் பூரி பகுதியில் கரையை கடந்தது.இந்த புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஃபானி புயல் பாதிப்பை தடுக்க மிகவும் உதவியது . இன்சாட்-3டி, 3டிஆர், ஸ்கேட்சாட்-1, ஓசன்சாட்-2 ஆகியவை புயல் பற்றி 15 நிமிடங்களுக்கு ஒரு முறை தந்த தரவுகள் மிகவும் பயன் தந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.