பிறந்தநாளை பிரம்மிக்க வைத்த மக்கள் செல்வன் …!!!! திரிஷாவுக்கு திரில் கொடுத்த திரைப்படக்குழு…!!! ருசிகர சம்பவம் …!!!

Default Image
தமிழ் திரையுலக சினிமாவில் முதன்முறையாக 20 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை என்றால்  திரிஷா மட்டும் தான்.இத்தகைய மதிப்பை பெற்றுள்ள திரிஷா இன்று தனது  36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு  பிறந்தநாள் பரிசாக  அவரது நடிப்பில் உருவாகி வரும் “பரமபதம் விளையாட்டு” படத்தின் ட்ரைலரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.
Image result for பரமபத விளையாட்டு
 இப்படம் இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்  நந்தா, வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன், மற்றும் பேபி மானஸ்வி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  திரிஷாவின் 60-வது படமான இந்த பரமபதம் விளையாட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
Image result for பரமபத விளையாட்டு
இது குறித்து  திரிஷா கூறுகையில்,  “மே மாதம்  4-ம் தேதி என்றாலே எனக்கு ஸ்பெஷலான நாள்.  இருந்தாலும் இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல். ‘பரமபதம் விளையாட்டு’ இது ஒரு அரசியல் அதிரடி படம். இந்த ஜானரில் இதுதான் எனக்கு  முதல் படம்.இப்படம்  ஒரு இரவில், காட்டுக்குள் நடப்பதுதான்  இதன் முழுக்கத்தை  . கண்டிப்பா இந்த படம் எல்லா தரப்பு  ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
Image result for பரமபத விளையாட்டு
‘பரமபதம் விடையாட்டு’ அனைத்தும் கலந்த த்ரில்லர், ஆக்‌ஷன் படம். அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தில் இருக்கு. படத்தின் ட்ரெய்லர் குறித்த உங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் தெரியப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
திரிஷாவின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் மற்றும்  திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூகவலைதள பக்கங்களில் தங்களது  வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
DINASUVADU.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu