பொய் வாக்குறுதிகளை கொடுத்த பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் : சோனியா காந்தி
உத்திர பிரதேச மாநிலத்தில், ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தி 5-வது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில், 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று சோனியா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், மக்களின் கைகளில் வலுவான ஆயுதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அளித்திருந்தார்.
ஆனால், அவரது ஆட்சியில், ஜிஎஸ்டியும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சிறு வர்த்தகர்களை அழித்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் பேசுகையில், பொய்யான வாக்குறுதிகளை அளித்த பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.