ஃபானி புயல் காரணமாக இன்று முதல் 7-ம் தேதி வரை சில ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்தது
ஒடிசாவில் இன்று ஃபானி புயல் கடற்கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள 10 லட்சத்திற்கு மேல் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ஃபானி புயல் மணிக்கு சுமார் 17-200 கி. மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் ஃபானி புயல் காரணமாக நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று 5 விரைவு ரயில்கள் ரத்து சந்திரகாச்சி – சென்ட்ரல், ஹவுரா – யஷ்வந்த்பூர், பாட்னா – எர்ணாகுளம், யஷ்வந்த்பூர் – ஹவுரா, பெங்களூர் கண்டோன்மெண்ட் – அகர்தலா ஆகிய விரைவு ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
நாளை சென்ட்ரல் – சந்திரகாச்சி, மங்களூர் – சந்திரகாச்சி மற்றும் விழுப்புரம் – புருலியா விரைவு ரயில்கள் ரத்து .மேலும் வரும் 5-ம் தேதி ராமேஸ்வரம் – புவனேஸ்வர், கொச்சிவேலி – கவுகாத்தி விரைவு ரயில்களும், வரும் 7-ம் தேதி திருவனந்தபுரம் – சில்சார் அரோனை விரைவு ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.