ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்பது பொய்யான செய்தி :தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என வெளியாகும் செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.
ஆர்.கே .நகர் இடைதேர்தலில் என்ன செய்தாலும் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவே முடியாது. ஆனால் அதற்குப் பதில். “அந்த ஏரியாவில் ஆறாயிரம் ருபாய் கொடுத்தார்கள். எங்கள் ஏரியாவில் நாலாயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள்.பாக்கி இரண்டாயிரம் ரூபாயை இடைத்தரகர்கள் அமுக்கிவிட்டார்கள்” என்று ஏராளமான வாக்காளர்கள் புகார் செய்த வண்ணம் உள்ளார்கள்.இவ்வாறு அதிமுக மீது திமுகவினரும் ,அதிமுக மீது தினகரன் அணியும் ,தினகரன் அணி மீது அதிமுகவும் ,அதிமுக மற்றும் தினகரன் அணியின் மீது பிஜேபியும் தேர்தல் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பணப்பட்டுவாடாவை கட்டுபடுத்த முடியவில்லை எனக் கூறி தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைதேர்தலை ரத்து செய்ய போவதாக செய்திகள்வெளிவந்த வண்ணம் இருந்தன.ஆனால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என வெளியாகும் செய்தி உண்மையில்லை” என மறுத்துள்ளார்.