ஃபானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியது !வரும் 3ம் தேதி கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

Default Image

நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில்,உச்சஉயர் தீவிர புயலாக உள்ள ஃபானி சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயலின் வேகம் மணிக்கு 205 கி.மீ. வரை அதிகரிக்கும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது . மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.தமிழக கடலோர பகுதிகளில் 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்