பயப்பட வேண்டியது நாங்கள் இல்லை ,அவர்கள் தான்-பிரியங்கா காந்தி
வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதனை நிறைவேற்றாதவர்கள்தான் பயப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.4 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.எனவே ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து வருகிறார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உள்துறை அமைச்சகம், குடியுரிமை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக தங்களுக்கு எந்தவிதமான பதட்டமும் இல்லை .வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதனை நிறைவேற்றாதவர்கள்தான் பயப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.