அஜித்தின் முதல் படமே டிராப் ஆனது !இயக்குனர் யாரு தெரியுமா?
தனது சினிமா பயணத்தை தொடங்கியபோது மிகவும் மோசமாக அனுபவங்களை அனுபவித்தவர் என்றால் அது தல அஜித் தான்.முதன் முதலில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் பி.சி.ஸ்ரீராம் சேர்ந்து ஆலயம் பட நிறுவனம் மூலம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தனர்.
அதற்க்காக அஜித்தை வைத்து போட்டோஷூட் முடிவடைந்தது.பிறகு அஜித்திடம் அவர்கள் ஷூட்டிங் எப்போது நடைபெறும் என்ற செய்தியை பின்னர் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அஜித்திற்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. சில பிரச்சனை காரணமாக அந்த படம் டிராப் அவுட் என்ற செய்தி தான் வந்தது.
இந்நிலையில் மீண்டும் தெலுங்கு படமான “பிரேம புஸ்தகம்” திரைப்படத்தில் நடித்தார்.ஆனால் அஜித்தின் துரதிஷ்டம் படத்தின் இயக்குனர் பாதியில் இறந்து விட்டார்.அதனால் அப்படமும் டிராப் ஆக இருந்த நிலையில் அப்படத்தை அவரது மகன் இயக்கத்தில் வெளியானது.
அடுத்ததாக தான், இயக்குனர் செல்வாவின் “அமராவதி” திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.பிறகு தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை நாயகனாக வளர்ந்து தற்போது பல இளைஞர்களின் மனதில் தல அஜித்தாக உள்ளார்.