ஹாலிவுட் பிரபல நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் காலமானார்
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான்.இவரது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் நடிப்பில் குட் பை குருயல் வோல்ட், தி சூப்பர் நேச்சுரல்ஸ், தி பிரசிடோ டார்க் மேன், பாய்ஸ் இன் த ஹூட் ஆகிய பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கலிபோர்னியாவில் உள்ள தனது மகன் ஜேஸூடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக்குறை காரணமாக நேற்று தனது வீட்டில் காலமானார்.
ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.