இனிமேல் உங்களுக்கு கிரீம் தேவையில்லை! அழகுக்கு அழகு சேர்க்கும் சூப்பர் டிப்ஸ்!
நாம் நமது அன்றாட வாழ்வில் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்தையும் பேணி காப்பதில் நாம் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றோம். அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்னை தான்.
இன்று நாம் நமது சருமத்தை பராமரிப்பதற்கு பல கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துகிறோம். இது நமது சருமத்திற்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது இந்த பதிவில், நாம் நமது சருமத்தை இயற்கையான முறையில் பராமரிப்பதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பால்
- அரிசிமாவு
- தேன்
- பன்னீர்
- தயிர்
- மஞ்சள் தூள்
- கடலை மாவு
- எலுமிச்சை சாறு
செய்முறை
முதலில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் பால் எடுத்து, அதனை முகத்தில் தடவ வேண்டும். பின் 2 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். அதன் பின் முகத்தை scrub செய்ய வேண்டும். அதற்கு, தேன், அரிசி மாவு மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் பூச விடும். அதன்பின் 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
பின், ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் மஞ்சள் தூளை கலந்து, முகத்தில் பூசி 10 நிமிடம் மாசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை கழுவ வேண்டும். அதன் பின் முகத்தில் பூசுவதற்கு பேஸ் பேக் தயார் செய்ய வேண்டும்.
பேஸ் பேக் தயார் செய்வதற்கு, ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, மஞ்சள் தூள், தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்ட் போல செய்துகொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளவென மின்னுவதை நாமே கண்கூடாக காணலாம்.