பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ விவகாரம்:ஆடியோவில் பேசியது நான் இல்லை

Default Image

தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும்  நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர் .மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை சிலர் மிரட்டியதாக  ஜோதி நகர் பார் நாகராஜ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பார் நாகராஜ் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த ஆடியோ ஓன்று வெளியாகி வருகிறது .இந்நிலையில் ஆடியோவில் பேசியது தான் இல்லை எனவும், பாலியல் வழக்கில் தன்னை சிக்க வைப்பதற்காக இது போன்று பரப்பப்படுகிறது எனவும் பார் நாகராஜ் கோவை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்