காஞ்சனா-2 பட சாதனையை முறியடித்த காஞ்சனா-3!
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள காஞ்சனா-3 திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தை ஹிந்தியில் எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 10 நாட்களில், தமிழகத்தில் மட்டும், ரூ.56.31 கோடி வசூல் செய்து, காஞ்சனா 2-ன் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.