ஊக்கமருந்து சோதனை சிக்கிய பிரபல இங்கிலாந்து வீரர் !உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து அதிரடியாக நீக்கம்!
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸை நீக்கியுள்ளது.
வரும் மே 30ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது .இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டு ஒரு மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது.
2019 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:இயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோ டென்லி, மொயின் அலி, ஆதில் ரஷீத், லியாம் பிளங்கெட், டாம் கரன், டேவிட் வில்லே, மார்க் உட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றிருந்த நிலையில் சமீபத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.
அதேபோல் மருத்துவ பரிசோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட அவருக்கு தடை விதித்தது.
அதேபோல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸை நீக்கியுள்ளது.மேலும் டெஸ்ட் , டி20 ,ஒரு நாள் என்று அனைத்து வகையான போட்டிகளுக்கான அணிகளில் இருந்தும் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.