சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்து வெளியான சிவாஜி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இந்தியா முழுவதும், ரூ 140 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.1001 மட்டுமே சம்பளமாக வாங்கினாராம். அதன் பிறகு அவர் கூடுதலாக ஒரு ரூபாய் கூட கேட்கவில்லையாம். இந்நிலையில், இந்த படம் விற்பனையான பின்பு, AVM நிறுவனமே நேரில் சென்று ரஜினியின் சம்பளத்தை கொடுத்ததாகவும், என்னுடைய சம்பளம் AVM-ல் இருந்தால் கூடுதல் பாதுகாப்பு தான் என்று ரஜினி கூறியதாகவும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.