இன்று (ஏப்ரல் 29) 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு?

Default Image

இன்று  (ஏப்ரல் 29-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி தேடி வரும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மறையும். வருமானம் பெருகும் நாள் ஆகும்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும் நாள் ஆகும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்றைய நாள் உங்களுக்கு  உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும் நாள் ஆகும்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்றைய நாளில் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது  ஆகும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்றைய நாளில்எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.  உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்  நாள் ஆகும்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்றைய நாளில் உங்களுக்கு குடும்பத்தில் தாராள தனவரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் கல்வி விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும் நாள் ஆகும்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்றைய நாள் உங்களுக்கு  வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வெளி நபர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும் நாள் ஆகும்.

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்றைய நாளில்  நீங்கள் உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுப்புடனும், சிக்கனத்துடனும் செயல்பட்டால் பண நெருக்கடிகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள் .

தனுசு ராசிக்காரர்கள்:

Image result for தனுஷ் ராசி

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும் நாள் ஆகும்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில்பயணங்களால் வீண் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்  நாள் ஆகும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Image result for கும்பம் ராசி

இன்றைய நாள் உங்களுக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும் நாள் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP