சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் மூலம் மீண்டும் களமிறங்கும் நடிகை விஜய சாந்தி
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான விஜய சாந்தி தமிழில் “கல்லுக்குள் ஈரம்” திரைப்படம் அறிமுகமானார். அதன் பின்னர் “நெற்றிக்கண் ” , “மன்னன் ” , “ராஜஸ்தான்” ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பெற்றார்.
தெலுங்கில் அவருக்கு “தேசிய விருது”, “நந்தி விருது” ஆகிய விருதுகளை வாங்கி உள்ளார்.தற்போது இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க ரூ 2 கோடி சம்பளம் எனவும் தகவல் கசிந்து உள்ளது.
விஜய சாந்தி கடைசியாக 2006-ம் ஆண்டிற்கு பிறகு நடிக்கவில்லை .மேலும் இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ” பண்ணாரி அம்மன் “என்பது குறிப்பிடத்தக்கது.