கொல்கத்தாவை மிரட்டிய பாண்டியா! இறுதியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
இன்று நடைபெற்ற 47-வது ஐபில் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது .இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்ப முதலே சிறப்பாக ஆடியது. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஒவர்கள் முடிவில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 232 ரன்கள் அடித்தது.களத்தில் ரசல் 80*(4-6 பவுண்டரி,6-8 சிக்ஸர்),கார்த்திக்15* ரன்களுடன் இருந்தனர்.லின் 54,கில் 76 ரன்கள் அடித்தனர். மும்பை அணியின் பந்துவீச்சில் சாகர்,பாண்டியா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதன் பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
மும்பை அணி தொடக்கத்திலே அந்த அணியின் கேப்டன் ரோகித் 12,டி காக் 0 ரன்களில் வெளியேறினார்கள்.இதன் பின் வந்த லூயிஸ் 15,சூரியகுமார் 26,பொல்லார்ட் 20 ரன்களில் வெளியேறினார்கள்.
ஆனால் ஒரு புறம் விக்கெட்டுகள் சென்றாலும் ஹர்டிக் பாண்டியா கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தார்.பாண்டியா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 91 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இதில் 9 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே அடித்தது.இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.