25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் !கருணாநிதியிடம் இருந்து ராஜதந்திரத்தை கற்றுள்ளேன்!துரைமுருகன்
25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். கருணாநிதியிடம் இருந்து ராஜதந்திரத்தை ஓரளவு கற்றுள்ளேன். அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு ஸ்டாலின் கையில் தான் தமிழகம் இருக்கும் என்று துரைமுருகன் பேசினார்.