இலங்கையில் 15 பேர் பலி!ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு

Default Image

இலங்கையில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.  

ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில்  உள்ள கல்முனை – சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த பகுதியில்,தீவிரவாதிகள் தங்கி இருந்த இடம் ஓன்று கண்டுபிடிக்கப்பட்டது.அந்த சமயத்தில் அங்கிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.அதற்கு ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.இதில் தீவிரவாதிகள் அங்கிருந்த  குண்டுகளை வெடிக்க செய்தனர்.இதில்  15 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கையில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்