தனி விமானத்தில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளினியுடன் பயணம்! என்ன காரணம்?
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே முக்கியத்துவம் செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தொகுப்பாளினி தியாவுடன் தனி விமானத்தில் மதுரைக்கு பயணம் செய்துள்ளார். இவரது பயணத்திற்கு காரணம் என்னெவென்றால், ஒரு பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு விஜய் சேதுபதி சென்றுள்ளார். அதற்காக அந்த நகை கடை இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளது.