பலரின் விமர்சனத்திற்கு ஆளான STR ! தம்பியின் திருமண நாள் அன்று குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்திய சிம்பு!
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளது. ஆனால், இந்த திருமண விழாவில் சிம்பு கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம் என்னவென்றால், சிம்பு தற்போது உடல் எடை குறைப்பிற்காக வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், லண்டனில் இருந்து கிளம்பி விட்டதாகவும் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை வந்தடைவார் என்று தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிம்பு, வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.