தாக்குதலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியானது
இலங்கையின் கொழும்பு பகுதியில் கடந்த ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை அன்று காலை கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
அதன் பின் மீண்டும் மதியம் 2 மணிக்கு இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் இதுவரை 359 பேர் உயிர் இழந்து உள்ளனர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டை சார்ந்தவர்கள்.
வெளிநாட்டை சார்ந்த 14 பேரை பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. இந்த தாக்குதலில் வெளிநாட்டை சார்ந்த 12பேர் உள்பட 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
இது வரை 76 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பயங்கரவாதிகளில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.