காஞ்சனா-3 படத்தின் பிரமிக்க வைக்கும் வசூல் வேட்டை!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் காஞ்சனா-3. இந்த படம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. மேலும், இதற்கு இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் ரிலீசாகி 6 நாட்களே ஆகியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், இது உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அடுத்தவார முடிவில், இப்படம் ரூ 150 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.