திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பில்லா ஜெகன் நீக்கம்
திமுக கட்சியை சேர்ந்த பில்லா ஜெகன், தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். இந்நிலையில், திமுகவின் பொது செயலாளர் அன்பழகன் தூத்துக்குடியை சேர்ந்த பில்லா ஜெகனை திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இவர் நடந்துள்ளதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.