கோடையில் நமக்கு மிகவும் தொல்லையாக இருப்பது வியர்வை தான்! இந்த வியர்வையை கட்டுப்படுத்த சில வழிகள்
கோடைகாலம் துவங்கி விட்டாலே, நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கோடை வெயில் நமது உடலில் பல ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. மேலும், கோடைகாலத்தில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுகிறது.
தற்போது, நாம் இந்த பதிவில் வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
தண்ணீர்
கோடைகாலங்களில் நாம் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும். மேலும், இளநீர், நுங்கு, பதநீர் போன்றவற்றை பருக வேண்டும். இப்படி செய்வதனால் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்தலாம்.
குளியல்
கோடைகாலத்தில், நமது உடலில் உள்ள வெப்பத்தை தணிக்க ஒரு நாளைக்கு 2 முறையாவது குளிக்க வேண்டும். இப்படி குளிப்பதானால், அதிகப்படியான வியர்வை வெளியேறுவதை தடுத்து, உடலில் துர்நாற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது.
உலர்ந்த ஆடை
கோடை காலங்களில் நன்கு உலர்ந்த ஆடைகளை அணிய வேண்டும். ஈரமான ஆடைகளை அணியும் போது, அது உடலில் துர்நாற்றம் உண்டாக வழிவகுக்கிறது.
காரமான உணவுகள்
கோடைகாலங்களில் அதிக காரமான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக வியர்வை பிரச்னை உள்ளவர்கள், உணவில், குடை மிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை
நாம் குளிக்க பயன்படுத்தும் நீரில் எலுமிச்சை கலந்து குளித்து வந்தால், உடலில் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
வாசனை திரவியங்கள்
பகல் நேரங்களில் நாம் வெளியில் செல்லும் போது, வாசனை திரவியங்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இதனால், உடலில் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.