அப்படி ஒரு கனவு கண்டால் கூட அது தவறாகி விடும் : நாஞ்சில் சம்பத் அதிரடி
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை, நாஞ்சில் சம்பத் சந்தித்துப் பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் மாநாட்டில் தமிழ்ச் சங்கம் சார்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதற்காக ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும்,ம.தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்குத் திரும்பச் செல்லும் எண்ணம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ” அப்படி ஒரு கனவு கண்டால்கூட அது தவறாகிவிடும்.” என்று கூறியுள்ளார்.