வெற்றிக்கு காரணம் இவர்தான்: தல தோனி புகழாரம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார்.

வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியதாவது…

ஒவ்வொரு அணியிலும் ஒருசில வீரர்கள் அற்புதமாக ஆடி வெற்றி தேடித் தருவார்கள். அவர்களுக்கு தொடரின் இறுதியில் சற்று ஓய்வு தேவைப்படும். வாட்சன் அப்படிப்பட்ட வீரர். அவர் ஒரு மேட்ச் வின்னர் ஆவார். வலைப்பயிற்சியில் அற்புதமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அதுபோல் இந்த போட்டியில் அற்புதமாக ஆடி எங்களுக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த வெற்றிக்குக் காரணம் அவர்தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் தல தோனி.

author avatar
Srimahath

Leave a Comment