பாஜக மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்
அனைத்து மாநிலங்களிலும், மக்களவை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று குஜராத் மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று உள்ளது.
இந்நிலையில், குஜராத், அகமதாபாத்தில் வாக்களித்த பின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்சா ஆகியோர் பேரணியாக சென்றுள்ளனர். இதனையடுத்து, இவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்ததால், 72 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.