பிரதமர் பதவியை ஊழல் பணத்தால் வாங்க முடியாது -பிரதமர் மோடி
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி வளர்ச்சியை தடுக்கும் ஸ்பீடு பிரேக்கர் எனக் கூறியுள்ளார். பிரதமர் மோடியை ஏமாற்றுக்காரர் என மம்தாவும் கூறி வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை கடுமையாக பேசுகையில் , பிரதமர் பதவி ஏலம் விட்டால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் செய்த பணத்தின் மூலம் அதனை வாங்க முயற்சி செய்வார்கள்.
ஆனால் பிரதமர் பதவியை பணத்தால் வாங்க முடியாது என கூறினார்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வெளிநாட்டு நடிகர் பிரசாரம் செய்தததை பற்றி பேசிய அவர் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்திற்கு இப்போது மக்கள் வருவதில்லை.
ஆகவே வெளிநாட்டில் இருந்து நடிகரை வர வைத்து பிரசாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.