விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் மாஸ் டைட்டில் என்ன தெரியுமா
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.
இவர் தற்போது “மிஸ்டர்.லோக்கல்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் “நானும் ரவுடி தான்” படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.இந்த படத்தில் புதுமுக ஹீரோயின் கல்யாணி நடிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த படத்திற்கு தற்போது “எல்.ஐ.சி” அதாவது Life Is Colourful எனும் பெயர் வைக்க பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.