சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 11 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் தூரத்துக்கு உணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால், பல்வேறு கட்டடங்களும், சூப்பர் மார்க்கெட் ஒன்றும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.