குண்டுவெடிப்பை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவர நீண்ட நாட்கள் ஆகும் : உயிர்தப்பிய சென்னை தம்பதிகள்
இலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில், 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த இனியன் , கீதாஞ்சலி தம்பதியினர் கடந்த 19-ம் தேதி இலங்கைக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் ஒன்றான கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி அருகே இருந்த மற்றோரு விடுதியில் தங்கியிருந்தனர். இவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இது குறித்து அத்தம்பதியினர் கூறுகையில், குண்டு வெடிப்பை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவர நீண்ட நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர்.