திருவிழாவில் 5 வயது உட்பட்ட 90 குழந்தைகள் வாந்தி ,மயக்கம்
சித்திரை மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல கோவில்களில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரியில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகம் விழாவில் வானகிரி சுற்றி உள்ள கிராம மக்கள் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த திருவிழாவில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட அனைத்து குழந்தைகளும் வாந்தி,மயக்கம்ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 90 குழந்தைகளும் 3 முதல் 5 வயது குழந்தைகள்.
தகவல் அறிந்து வந்த போலீசார் திருவிழாவில் ஐஸ்கிரீம் விற்ற 7 தனியார் கடைகளில் இருந்து மாதிரி ஐஸ்கிரீமை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மருத்துவமனைக்கு சென்று வட்டாட்சியர் ஆறுதல் கூறினார்.