வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை பணியிட மாற்றம்!
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்காத காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு பதிலாக போக்குவரத்து இணை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா வடசென்னை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
source: dinasuvadu.com