இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்! முக்கிய தகவலை வெளியிட்ட இலங்கை அரசு !
இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது.
இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 290-ஆக இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 300-ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொடர் குண்டு வெடிப்புகளுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு தான் காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் இலங்கை அரசு தகவல் அளித்துள்ளது.