அமமுகவை பதிவு செய்த டிடிவி தினகரன்: சசிகலாவை நட்டாற்றில் விட்டு அடுத்த கட்ட வேலை !
தில்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை பதிவு செய்துள்ளார் டிடிவி தினகரன். ஆர்கேநகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலும் அதே சின்னத்தை கேட்டார் தினகரன்.
ஆனால் பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் அதே சின்னத்தை கொடுக்கவில்லை. இதன் காரணமாக தற்போது கட்சியைப் பதிவு செய்து நிலையான ஒரு சின்னத்தை பெற முடிவு செய்துள்ளார் தினகரன்.
மேலும் அதிமுகவிற்கு துணைப் பொதுச்செயலாளர் என்று இருந்த தினகரன் தற்போது தனது புதிய அமமுகவிற்கு பொதுச்செயலாளர் என்று மாறியுள்ளார். இதன் காரணமாக தனது சித்தியான சசிகலாவை அம்போ என நட்டாற்றில் விட்டுவிட்டு அடுத்த கட்ட வேலையை தொடங்கியுள்ளார் தினகரன்.