வாக்கு எண்ணும் மையத்தில் இரவு நேரங்களில் தான் தவறுகள் நடக்கிறது -தங்க தமிழ்ச்செல்வன்
மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நேற்று பெண் தாசில்தார் உள்ளிட்ட சிலர் காலை 3 மணியளவில் அனுமதியில்லாமல் சென்று இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்து சில தகவல்களை சேகரித்ததாக செய்திகள் வந்தது.
இந்த விவகாரத்தில் பெண் தாசில்தார் சம்பூர்ணம் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்தனர்.இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் இரவில் அதிகாரி நுழைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தங்க தமிழ்ச்செல்வன் கூறுகிறார்.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் பகல் நேரங்களில் வேட்பாளர் முகவர்கள் இருப்பதை விட இரவு நேரங்களில் தான் தவறுகள் நடப்பதால் இரவு நேரங்களில் முகவர்கள் இருக்க வேண்டும் என கூறினார்.
இரவு 10 மணிக்கு மேல் முகவரை அனுமதிக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினர்.மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் 24 மணி நேரமும் இருக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.