தல 60 ரெடியாகிவிட்டதா? யாரு இயக்குனர்? யாரு இசையமைப்பாளர்?
விஸ்வாசம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை போனிகபூர் தயாரிக்க்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. படத்தினை ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கும் அடுத்த படத்தையும், போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தில் ஹீரோலாக் தற்போது அஜித் நடிப்பார் என்ற செய்தி பரவி வருகிறது. மேலும் இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுமையாக ரசிகர்களும் காத்திருக்க வேண்டும்.
DINASUVADU