சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் மே 19-ம் தேதி ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், பிற்பகலில் சூலூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.