ஓட்டு போட சென்ற இடத்தில் 41 வருடங்களுக்கு பிறகு பிரகாஷ் ராஜிற்கு கிடைத்த அதிஷ்டம்
நடிகர் பிரகாஷ் ராஜ் கோலிவுட் சினிமாவில் குணசித்திர நடிகராக வலம் வருகிறார்.தற்போது சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அரசியலில் களமிறங்குவது வழக்கமாகி விட்டது.இவர் சுயேச்சையாக மத்திய பெங்களூரு போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் 41 வருடங்களுக்கு பிறகு அவர் படித்த பள்ளியில் சென்று அவரது ஓட்டை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் ,நான் எனது பள்ளியில் 41 வருடங்களுக்கு முன்பு எந்த வகுப்பறையில் உட்காந்து இருந்தேனோ அதே இடத்தில எனது வாக்கை செலுத்தினேன். மறக்க முடியாத நினைவுகளும்,புதுப்பயணமும் என ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
இதனை பார்த்த அனைவரும் 41 ஆண்டுகளுக்கு பிறகு இவருக்கு இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்கள்.